ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوكًا لَّا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍ وَمَن رَّزَقْنَٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنفِقُ مِنْهُ سِرًّا وَجَهْرًا هَلْ يَسْتَوُۥنَ ٱلْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். பிறருக்குச் சொந்தமான, ஒன்றையும் (செய்ய) ஆற்றல் பெறாத ஓர் அடிமை. இன்னும் ஒருவர் அவருக்கு நாம் நம் புறத்திலிருந்து அழகிய வாழ்வாதாரத்தை வழங்கினோம். ஆகவே அவர் அதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிகிறார். (இவ்விருவரும்) சமமாவார்களா? (சமமாக மாட்டார்கள்.) புகழ் அல்லாஹ்விற்கே. எனினும் அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். பிறருக்குச் சொந்தமான, ஒன்றையும் (செய்ய) ஆற்றல் பெறாத அடிமை ஒருவர் இருக்கிறார். இன்னும் (வேறு) ஒருவர் இருக்கிறார். அவருக்கு நாம் நம் புறத்திலிருந்து அழகிய வாழ்வாதாரத்தை வழங்கினோம். ஆகவே அவர் அதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிகிறார். இ(ந்த இரு)வர்கள் சமமாவார்களா? (சமமாக மாட்டார்கள்.) புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi75. அல்லாஹ் (இதற்கு இருவரை) உதாரணமாகக் கூறுகிறான். ஒருவன் ஒரு (பொருளைச் சுயமாகச் செய்யவும் கொடுக்கவும்) சக்தியற்ற அடிமை; மற்றொருவனோ நாம் அவனுக்கு நல்ல பொருள்களை ஏராளமாகக் கொடுத்திருக்கிறோம். அவனும் அவற்றை இரகசியமாகவும் பகிரங்கமாகவும் தானம் செய்து வருகிறான். இவ்விருவரும் சமமானவரா? (சமமாக மாட்டார்கள்.) எல்லா புகழ்களும் அல்லாஹ்வுக்குரியன. அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்வதில்லை.