وَضَرَبَ ٱللَّهُ مَثَلًا رَّجُلَيْنِ أَحَدُهُمَآ أَبْكَمُ لَا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍ وَهُوَ كَلٌّ عَلَىٰ مَوْلَىٰهُ أَيْنَمَا يُوَجِّههُّ لَا يَأْتِ بِخَيْرٍ هَلْ يَسْتَوِى هُوَ وَمَن يَأْمُرُ بِٱلْعَدْلِ وَهُوَ عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான்: இரு ஆடவர்கள் அவ்விருவரில் ஒருவர் ஊமை. எதையும் செய்ய சக்தி பெறமாட்டார்; அவர் தன் எஜமானர் மீது சுமையாக இருக்கிறார். அவரை அவர் எங்கு (வேலைக்கு) அனுப்பினாலும் ஒரு நன்மையும் அவர் செய்யமாட்டார். இவரும், நேரான வழியில் தானும் இருந்துகொண்டு (மற்றவர்களையும்) நீதத்தைக் கொண்டு ஏவுகின்றவரும் சமமாவார்களா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான்: இரு ஆடவர்கள் இருக்கிறார்கள். அவ்விருவரில் ஒருவர் ஊமை. அவர் எதையும் செய்ய சக்தி பெறமாட்டார். இன்னும், அவர் தன் எஜமானர் மீது சுமையாக இருக்கிறார். அவரை அவர் எங்கு (வேலைக்கு) அனுப்பினாலும் ஒரு நன்மையும் அவர் செய்யமாட்டார். இவரும், எவர் தானும் நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தை ஏவுகிறாரோ அவரும் சமமாவார்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi76. இன்னும், இரு மனிதரை (மற்றொரு) உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்: அதிலொருவர் ஊமை(யான அடிமை); ஏதும் செய்ய சக்தியற்றவர். அவர் தன் எஜமானருக்குச் சுமையாக இருக்கிறார். அவரை எங்கு அனுப்பியபோதிலும் (தீங்கைத் தவிர) நன்மை எதையும் அவர் செய்வதில்லை. மற்றொருவரோ (நல்லதை அறிந்து) நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தையே ஏவுகிறார். இவருக்கு (ஊமையாகிய) அவர் சமமாவாரா?