وَٱللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ فِى ٱلرِّزْقِ فَمَا ٱلَّذِينَ فُضِّلُوا۟ بِرَآدِّى رِزْقِهِمْ عَلَىٰ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَهُمْ فِيهِ سَوَآءٌ أَفَبِنِعْمَةِ ٱللَّهِ يَجْحَدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் சிலரை சிலரைவிட வாழ்வாதாரத்தில் அல்லாஹ்தான் மேன்மையாக்கினான். இவ்வாறிருந்தும், மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் மீது திருப்பக் கூடியவர்களாக (-மேல்மிச்சமான செல்வத்தை தங்கள் அடிமைகளுக்கு தரக்கூடியவர்களாக) இல்லை. அவர்களும் அதில் (இவர்களுக்கு) சமமானவர்களே. அல்லாஹ்வின் அருளையா (அவர்கள்) நிராகரிக்கின்றனர்?
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களில் சிலரைவிட சிலரை வாழ்வாதாரத்தில் அல்லாஹ்தான் மேன்மையாக்கினான். ஆக, இவ்வாறிருந்தும், மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வாதாரத்(தில் தங்கள் தேவைக்குப் போக இருப்ப)தை தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் மீது திருப்பக் கூடியவர்களாக இல்லை. (அப்படி கொடுத்தால்) அவர்களும் அதில் (இவர்களுக்கு) சமமானவர்களாக ஆகிவிடுவார்கள். (ஆனால், அதை அவர்கள் விரும்புவது இல்லை. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மட்டும் இணை தெய்வங்களை எப்படி கற்பனை செய்கிறார்கள்?) அல்லாஹ்வின் அருளையா (அவர்கள்) நிராகரிக்கிறார்கள் (அதில் அல்லாஹ் அல்லாதவர்களை கூட்டாக்குவதன் மூலம்)?
Tamil Translation - Abdulhamid Baqawi71. உங்களில் சிலரைவிட சிலரை செல்வத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அப்படி மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்ட (வேலைக்காரர், அடிமை ஆகிய)வர்கள் தங்கள் செல்வத்தில் (தங்களுக்கு) சமமானவர்களாக இருந்தும் (முறைப்படி) அதை அவர்களுக்கு கொடுப்பதில்லை. (இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு அளித்திருக்கின்ற) அல்லாஹ்வின் அருளை அவர்கள் நிராகரிக்கின்றனரா?