وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَٰجًا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَٰجِكُم بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ أَفَبِٱلْبَٰطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ ٱللَّهِ هُمْ يَكْفُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை உங்களுக்காக அல்லாஹ் படைத்தான். உங்கள் மனைவிகளிலிருந்து ஆண் பிள்ளைகளையும், பேரன்களையும் உங்களுக்கு படைத்தான். நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்தான். (இவ்வாறிருக்க) அவர்கள் (சிலைகள் அல்லது இறந்தவர்கள் பிள்ளைகள் தருவார்கள் என்று) பொய்யை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கின்றனரா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை உங்களுக்காக அல்லாஹ் படைத்தான். உங்கள் மனைவிகளிலிருந்து ஆண் பிள்ளைகளையும், பேரன்களையும் உங்களுக்கு படைத்தான். இன்னும், நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்தான். ஆக, (இவ்வாறிருக்க) அவர்கள் (சிலைகள் அல்லது இறை நேசர்கள் குழந்தை பாக்கியம் தருவார்கள் என்று) பொய்யை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கின்றனரா?
Tamil Translation - Abdulhamid Baqawi72. உங்களிலிருந்தே உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் படைக்கின்றான். உங்களுக்கு நல்ல உணவுகளை வழங்குகிறான். மேலும், (இப்படியிருக்க) அவர்கள் (தாங்களாகக் கற்பனை செய்து கொண்ட) பொய்யானவற்றை நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிக்கின்றனரா?