caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 30

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:30

وَقِيلَ لِلَّذِينَ ٱتَّقَوْا۟ مَاذَآ أَنزَلَ رَبُّكُمْ قَالُوا۟ خَيْرًا لِّلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌ وَلَدَارُ ٱلْـَٔاخِرَةِ خَيْرٌ وَلَنِعْمَ دَارُ ٱلْمُتَّقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு, “உங்கள் இறைவன் என்ன இறக்கினான்” என்று கூறப்பட்டது, “நன்மையை (இறக்கினான்)” என்று கூறினார்கள். நல்லறம் புரிந்தவர்களுக்கு இந்த உலகில் நன்மை உண்டு. (அவர்களுக்குரிய) மறுமையின் வீடுதான் (இம்மையை விட அவர்களுக்கு) மிக மேலானது. (அல்லாஹ்வை) அஞ்சுபவர்களின் (மறுமை) வீடு மிகச் சிறந்தது.
Tamil Translation - Omar Sharifஇறையச்சம் உள்ளவர்களிடம், “உங்கள் இறைவன் என்ன இறக்கினான்” என்று கூறப்பட்டது. “சிறந்ததை இறக்கினான்” என்று அவர்கள் கூறினார்கள். நல்லறம் புரிந்தவர்களுக்கு இந்த உலகில் அழகியது உண்டு. (அவர்களுக்குரிய) மறுமையின் இல்லமோ (இம்மையை விட அவர்களுக்கு) மிக மேலானதாகும். இன்னும், இறையச்சமுள்ளவர்களின் (மறுமை) இல்லமோ மிகச் சிறந்ததாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. இறையச்சமுடையவர்களை நோக்கி (இக்குர்ஆனைப் பற்றி) ‘‘உங்கள் இறைவன் என்ன இறக்கி வைத்தான்'' என்று கேட்கப்பட்டால், அதற்கவர்கள், ‘‘நன்மையையே (இறக்கி வைத்தான்)'' என்று கூறுவார்கள். (ஏனென்றால்) நன்மை செய்தவர்களுக்கு இவ்வுலகிலும் நன்மைதான். (அவர்களுடைய) மறுமையின் வீடும் மிக்க மேலானது. இறையச்சமுடையவர்களின் வீடு எவ்வளவு நேர்த்தியானது!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70