caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nahl அத்தியாயம், வசனம் 31

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 70 · 16:31

جَنَّٰتُ عَدْنٍ يَدْخُلُونَهَا تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ لَهُمْ فِيهَا مَا يَشَآءُونَ كَذَٰلِكَ يَجْزِى ٱللَّهُ ٱلْمُتَّقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்த வீடு) அத்ன் (என்னும்) சொர்க்கங்கள், அவற்றில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. இவ்வாறுதான் அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுக்கு கூலி கொடுக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஅத்ன் (என்னும்) சொர்க்கங்கள் (அவர்களுக்கு உண்டு). அவற்றில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. இவ்வாறுதான் அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுக்கு கூலி கொடுக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. (அவ்வீடு) என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய சொர்க்கங்களாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். அவர்கள் விரும்பியதெல்லாம் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். இறையச்சமுடையவர்களுக்கு இவ்வாறே அல்லாஹ் கூலி கொடுக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70