وَيَسْتَعْجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِن قَبْلِهِمُ ٱلْمَثُلَٰتُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلَىٰ ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلْعِقَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம்மிடம் நல்லதிற்கு முன்னர் கெட்டதை அவசரமாகத் தேடுகின்றனர். தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன் (திருந்திவிடுகிற) மக்களை மன்னிப்பவன்தான், அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும். (திருந்தாத பாவிகளுக்கு) நிச்சயமாக உம் இறைவன் தண்டனை (வழங்குவதில்) கடுமையானவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) உம்மிடம் நல்லதற்கு முன்னர் கெட்டதை கேட்டு அவசரப்படுத்துகிறார்கள். மேலும், தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) வந்து சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன், மக்களை - அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும் மன்னிப்பவனாக இருக்கிறான் (அவர்கள் திருந்தி நேர்வழியில் வந்தால்). மேலும், நிச்சயமாக உம் இறைவன், (திருந்தாத பாவிகளை) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக்கொள்ள இவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உமது இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்த போதிலும், நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவன் ஆவான்.