caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Ra'd அத்தியாயம், வசனம் 7

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 96 · 13:7

وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦٓ إِنَّمَآ أَنتَ مُنذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“(நபியே!) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்(கள்). (நபியே!) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். எல்லா மக்களுக்கும் (அவர்களை வழி நடத்துகின்ற ஒரு) தலைவர் உண்டு.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி), “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறபடி) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். மேலும், எல்லா மக்களுக்கும் (அவர்களை நன்மையின் பக்கம்; அல்லது தீமையின் பக்கம் வழி நடத்துகின்ற) ஒரு தலைவர் இருந்திருக்கிறார்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. ‘‘(நபியே!) இந்நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி) இவர் மீது இவருடைய இறைவனி டமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே தவிர வேறில்லை; (ஆகவே, அவர்கள் விரும்பியவாறெல்லாம் செய்ய வேண்டுவது உமது கடமை இல்லை. இவ்வாறே) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (ஒரு) வழிகாட்டி வந்திருக்கிறார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70