وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِى خَلْقٍ جَدِيدٍ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ وَأُو۟لَٰٓئِكَ ٱلْأَغْلَٰلُ فِىٓ أَعْنَاقِهِمْ وَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَٰلِدُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! இணைவைப்பாளர்கள் சிலைகளை வணங்குவதைப் பற்றி) நீர் ஆச்சரியப்பட்டால், “நாம் (இறந்து மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டால், (அதற்கு பின்னர்) புதிய படைப்பில் நிச்சயமாக நாம் உருவாக்கப்படுவோமா?” என்ற அவர்களுடைய கூற்றும் (அதிகம்) ஆச்சரியமானதே! இவர்கள்தான் தங்கள் இறைவனை நிராகரித்தவர்கள். இவர்களுடைய கழுத்துகளில்தான் அரிகண்டங்கள் இருக்கும். இவர்கள்தான் நரகவாசிகள்! அதில் இவர்கள் நிரந்தரமானவர்கள்.
Tamil Translation - Omar Sharif(நபியே! மக்களில் பலர் அல்லாஹ்வை வணங்காமல், கற் சிலைகளை வணங்குவதைப் பற்றி) நீர் ஆச்சரியப்பட்டால், “நாம் (இறந்து மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டால், (அதற்கு பின்னர்) புதியதோர் படைப்பாக நிச்சயமாக நாம் உருவாக்கப்படுவோமா?” என்ற அவர்களுடைய கூற்றோ மிக ஆச்சரியமானதே! இவர்கள்தான் தங்கள் இறைவனை நிராகரித்தவர்கள். மேலும், இவர்களுடைய கழுத்துகளில் அரிகண்டங்கள் இருக்கும். இன்னும், இவர்கள் நரகவாசிகளே! அதில் இவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. (நபியே! இந்நிராகரிப்பவர்கள் உம்மைப் பொய்யாக்குவது பற்றி) நீர் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) ‘‘நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?'' என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்த இறைவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே, மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள்.