وَقَالَ يَٰبَنِىَّ لَا تَدْخُلُوا۟ مِنۢ بَابٍ وَٰحِدٍ وَٱدْخُلُوا۟ مِنْ أَبْوَٰبٍ مُّتَفَرِّقَةٍ وَمَآ أُغْنِى عَنكُم مِّنَ ٱللَّهِ مِن شَىْءٍ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُتَوَكِّلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“என் பிள்ளைகளே! (எகிப்தில் நுழையும் போது) ஒரே ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள். (தனித் தனியாக) பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் நான் உங்களை விட்டும் தடுக்க முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவன் மீதே நம்பிக்கை வைத்துவிட்டேன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்கவும்” என்று கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர் கூறினார்: “என் பிள்ளைகளே! (எகிப்தில் நுழையும்போது) ஒரே ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள். (தனித் தனியாக) பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் நான் உங்களை விட்டும் தடுக்க முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (யாருக்கும்) இல்லை. இன்னும், நான் அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டேன். ஆக, நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்திரு)க்கவும்.”
Tamil Translation - Abdulhamid Baqawi67. பின்னும் (அவர்களை நோக்கி) ‘‘என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் எதையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்புபவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்'' என்றார்.