caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 68

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:68

وَلَمَّا دَخَلُوا۟ مِنْ حَيْثُ أَمَرَهُمْ أَبُوهُم مَّا كَانَ يُغْنِى عَنْهُم مِّنَ ٱللَّهِ مِن شَىْءٍ إِلَّا حَاجَةً فِى نَفْسِ يَعْقُوبَ قَضَىٰهَا وَإِنَّهُۥ لَذُو عِلْمٍ لِّمَا عَلَّمْنَٰهُ وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்கள் தந்தை கட்டளையிட்ட முறையில் நுழைந்த போது, யஅகூபுடைய மனதிலிருந்த ஒரு தேவையை அவர் நிறைவேற்றியதைத் தவிர அது அவர்களைவிட்டும் அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய வேறு) எதையும் தடுப்பதாக இல்லை. நிச்சயமாக அவர் நாம் அவருக்கு கற்பித்த காரணத்தால் அறிவுடையவர் ஆவார். ஆனால் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் தங்கள் தந்தை கட்டளையிட்ட முறையில் (எகிப்து நகரத்தில்) நுழைந்தபோது, அது யஅகூபுடைய மனதிலிருந்த ஒரு தேவையை அவர் நிறைவேற்றியதைத் தவிர அவர்களை விட்டும் அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் அது தடுப்பதாக இல்லை. மேலும், நிச்சயமாக அவர் நாம் அவருக்கு கல்வி கற்பித்திருந்த காரணத்தால் அறிவு ஞானம் உடையவராக இருந்தார். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi68. (எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஅகூபினுடைய மனதிலிருந்த (ஓர்) எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய (விதியில் உள்ள எந்த) ஒரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. (ஏனென்றால், இறுதியாக புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதை) அறிந்தவராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதை) அறியாதவர்களாகவே இருந்தனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70