وَجَآءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا۟ وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُۥ قَالَ يَٰبُشْرَىٰ هَٰذَا غُلَٰمٌ وَأَسَرُّوهُ بِضَٰعَةً وَٱللَّهُ عَلِيمٌۢ بِمَا يَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களில் நீர் கொண்டு வருபவரை அனுப்பினார்கள். அவர் (தன்) வாளியை(க் கிணற்றில்) இறக்கினார். (அதைப் பிடித்து யூஸுஃப் மேலே வரவே,) “ஆ... நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவர்! என்று கூறினார். (அவரை தங்கள்) வர்த்தகப் பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்தார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஒரு பயணக் கூட்டம் (அந்த வழியாக) வந்தது. அவர்கள் தங்களில் தண்ணீர் தேடும் நபரை அனுப்பினார்கள். ஆக, அவர் தனது வாளியை(க் கிணற்றில்) இறக்கினார். (அதைப் பிடித்து யூஸுஃப் மேலே வரவே,) “(எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியே! இதோ ஒரு (அழகிய) சிறுவர்! என்று கூறினார். (அவரை) ஒரு வர்த்தகப் பொருளாக (-விற்கப்படும் ஓர் அடிமையாக ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை அவர்கள் (தங்களது மற்ற தோழர்களிடம்) மறைத்தார்கள். அல்லாஹ்வோ அவர்கள் செய்வதை நன்கறிந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்கள் பணியாளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பினார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு ‘‘உங்களுக்கு) நற்செய்தி! இதோ (அழகிய) சிறுவர் ஒருவர்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.