caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 18

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:18

وَجَآءُو عَلَىٰ قَمِيصِهِۦ بِدَمٍ كَذِبٍ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا فَصَبْرٌ جَمِيلٌ وَٱللَّهُ ٱلْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருடைய சட்டையில் ஒரு பொய்யான இரத்தத்தை (தடவி)க் கொண்டு வந்தனர். “மாறாக, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அலங்கரித்தன. (அதை நீங்கள் செய்து விட்டீர்கள்.) ஆகவே, அழகிய பொறுமை (தான் நல்லது). நீங்கள் வர்ணிப்பவை மீது அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று (யஅகூப்) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவருடைய சட்டையின் மீது ஒரு பொய்யான இரத்தத்தை (தடவி)க் கொண்டு வந்தனர். (யஅகூப்) கூறினார்: “(அப்படி ஏதும் நடக்கவில்லை.) மாறாக, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அலங்கரித்தன. (ஆகவே, அதை நீங்கள் செய்து விட்டீர்கள்.) ஆக, அழகிய பொறுமை (தான் நல்லது). நீங்கள் (யூஸுஃபை பற்றி) என்ன விளக்கம் கூறுகிறீர்களோ அதற்கு அல்லாஹ்விடமே உதவி தேடப்படுகிறது.”
Tamil Translation - Abdulhamid Baqawi18. (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு ‘‘அவரை ஓநாய் அடித்துத் தின்னவே) இல்லை'' உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ்விடம் உதவி தேடுகிறேன்'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70