caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yusuf அத்தியாயம், வசனம் 111

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 53 · 12:111

لَقَدْ كَانَ فِى قَصَصِهِمْ عِبْرَةٌ لِّأُو۟لِى ٱلْأَلْبَٰبِ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَىٰ وَلَٰكِن تَصْدِيقَ ٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَىْءٍ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (இது) புனையப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கவில்லை. எனினும் தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துவதாகவும் எல்லாவற்றையும் விவரிப்பதாகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு (விசேஷமான) ஓர் அருளாகவும் இருக்கின்றது.
Tamil Translation - Omar Sharifநிறைவான அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கவில்லை. எனினும், தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துவதாகவும் எல்லாவற்றையும் விவரிப்பதாகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு (விசேஷமான) ஓர் அருளாகவும் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi111. அறிவுடையவர்களுக்கு (நபிமார்களாகிய) இவர்களுடைய சரித்திரங்களில் நல்லதோர் படிப்பினை நிச்சயமாக இருக்கிறது. (இது) பொய்யான கட்டுக் கதையல்ல; ஆனால், அவர்களிடமுள்ள வேதத்தை உண்மையாக்கி வைத்து ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துக் கூறுவதாக இருக்கிறது. மேலும், நம்பிக்கையாளர்களுக்கு நேரான வழியாகவும் ஓர் அருளாகவும் இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70