حَتَّىٰٓ إِذَا ٱسْتَيْـَٔسَ ٱلرُّسُلُ وَظَنُّوٓا۟ أَنَّهُمْ قَدْ كُذِبُوا۟ جَآءَهُمْ نَصْرُنَا فَنُجِّىَ مَن نَّشَآءُ وَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ ٱلْقَوْمِ ٱلْمُجْرِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைய, நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் என்று (மக்கள்) எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-தூதர்களை) வந்த(டைந்த)து. நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் தண்டனை பாவிகளான சமுதாயத்தை விட்டு (ஒரு போதும்) திருப்பப்படாது.
Tamil Translation - Omar Sharifஇறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைந்து, இன்னும், நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் (-அல்லாஹ் உடைய உதவி தங்களுக்கு வரும் என்று அவர்கள் கூறியது பொய்யாக ஆகிவிட்டது) என்று மக்கள் எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-அந்த தூதர்களை) வந்தடைந்தது. ஆக, நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். மேலும், நம் தண்டனை, குற்றவாளிகளான சமுதாயத்தை விட்டு (ஒரு போதும்) திருப்பப்படாது.
Tamil Translation - Abdulhamid Baqawi110. நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நினைத்து, நம்பிக்கை இழந்து விடும்வரை (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம்.) பின்னர், நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். குற்றம் செய்யும் மக்களை விட்டு நம் வேதனை நீக்கப்படாது.