caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Hud அத்தியாயம், வசனம் 81

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 52 · 11:81

قَالُوا۟ يَٰلُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَن يَصِلُوٓا۟ إِلَيْكَ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ ٱلَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ إِلَّا ٱمْرَأَتَكَ إِنَّهُۥ مُصِيبُهَا مَآ أَصَابَهُمْ إِنَّ مَوْعِدَهُمُ ٱلصُّبْحُ أَلَيْسَ ٱلصُّبْحُ بِقَرِيبٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“லூத்தே! நிச்சயமாக நாங்கள் உம் இறைவனின் தூதர்கள். (இவர்கள்) அறவே உம் பக்கம் (வந்து) சேரமாட்டார்கள். ஆகவே, இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தைக் கொண்டு செல்வீராக; உம் மனைவியைத் தவிர. உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற (வேதனையான)து நிச்சயமாக அவளையும் அடையக்கூடியதே. நிச்சயமாக இவர்களின் வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?” என்று கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharif(வானவர்கள்) கூறினார்கள்: “லூத்தே! நிச்சயமாக நாங்கள் உம் இறைவனின் (வானவ) தூதர்கள். (ஆகவே, இவர்கள்) அறவே உம் பக்கம் வந்து சேர மாட்டார்கள். ஆகவே, உம் மனைவியைத் தவிர, (மற்ற) உம் குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வீராக. இன்னும், உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற தண்டனை நிச்சயமாக அவளையும் அடையக்கூடியதே. நிச்சயமாக அவர்களின் (தண்டனை இறங்குவதற்கு) வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?”
Tamil Translation - Abdulhamid Baqawi81. (அதற்கு லூத்துடைய விருந்தாளிகள் அவரை நோக்கி) ‘‘லூத்தே! நிச்சயமாக நாங்கள் உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்(களாகிய வானவர்)களாவோம். இவர்கள் நிச்சயமாக உம்மை வந்தடைய முடியாது. (இன்று) இரவில் ஒரு சிறு பகுதி இருக்கும்பொழுது நீர் உம் குடும்பத்துடன் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக; (உமது சொல் கேளாத) உமது மனைவியைத் தவிர, உங்களில் ஒருவரும் அவர்களைத் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற வேதனை நிச்சயமாக அவளையும் அடையும். (வேதனை வர) நிச்சயமாக இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?'' என்று கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70