caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:24

إِنَّمَا مَثَلُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ مِمَّا يَأْكُلُ ٱلنَّاسُ وَٱلْأَنْعَٰمُ حَتَّىٰٓ إِذَآ أَخَذَتِ ٱلْأَرْضُ زُخْرُفَهَا وَٱزَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَآ أَنَّهُمْ قَٰدِرُونَ عَلَيْهَآ أَتَىٰهَآ أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَٰهَا حَصِيدًا كَأَن لَّمْ تَغْنَ بِٱلْأَمْسِ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْـَٔايَٰتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉலக வாழ்க்கையின் உதாரணமெல்லாம் மேகத்திலிருந்து நாம் இறக்கிய நீரைப் போன்றுதான். மனிதர்களும் கால்நடைகளும் புசிப்பதிலிருந்து பூமியின் தாவரம் அ(ந்)த (மழையி)ன் மூலம் கலந்து (அடர்த்தியாக வளர்ந்து)விட்டது. இறுதியாக, பூமி தன் அலங்காரத்தை எடுத்து, அலங்காரமாகிவிட, அதன் உரிமையாளர்கள் (பயிர்களை அறுவடைசெய்ய வந்து,) நிச்சயமாக தாங்கள் அவற்றின்மேல் (அறுவடை செய்ய) ஆற்றல் பெற்றவர்கள் என்று எண்ணியபோது இரவில் அல்லது பகலில் நம் கட்டளை அவற்றுக்கு வந்தது. ஆகவே, அவற்றை அவை நேற்றைய தினம் இல்லாததைப் போன்று வேரறுக்கப்பட்டதாக ஆக்கினோம். சிந்திக்கின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்.
Tamil Translation - Omar Sharifஉலக வாழ்க்கையின் உதாரணமெல்லாம் மேகத்திலிருந்து நாம் இறக்கிய (மழை) நீரைப் போன்றுதான். ஆக, மனிதர்களும் கால்நடைகளும் புசிக்கின்ற பூமியின் தாவரம் அ(ந்)த (மழையி)ன் மூலம் முளைத்து, (ஒன்றோடு ஒன்று) கலந்து (அடர்த்தியாக வளர்ந்து) விட்டது. இறுதியாக, (அந்த செடி கொடிகளால்) பூமி அலங்காரமாக காட்சி தந்தது. இன்னும், அதன் உரிமையாளர்கள் (பயிர்களை அறுவடை செய்வதற்காக அங்கு வந்து,) நிச்சயமாக அவர்கள் அவற்றின் மேல் (-அவற்றை அறுவடை செய்ய) ஆற்றல் பெற்றவர்கள் என்று எண்ணியபோது, - (அவற்றை அழிப்பதற்குரிய) நம் கட்டளை இரவில் அல்லது பகலில் அவற்றுக்கு வந்தது. ஆகவே, அவற்றை அவை நேற்றைய தினம் இல்லாததைப் போன்று வேரறுக்கப்பட்டதாக நாம் ஆக்கி விட்டோம். (அல்லாஹ்வின் அத்தாட்சிகளில்) சிந்திக்கின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு நாம் விவரிக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவற்றுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்து) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம் கட்டளை(யினால் ஓர் ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவேயில்லையென்று எண்ணக்கூடியவாறு அவற்றை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70