caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 20

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:20

وَيَقُولُونَ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦ فَقُلْ إِنَّمَا ٱلْغَيْبُ لِلَّهِ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஓர் அத்தாட்சி அவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) கூறுவீராக! “மறைவானவை எல்லாம் அல்லாஹ்வுக்குரியனவே. ஆகவே, நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்.”
Tamil Translation - Omar Sharifஇன்னும், “ஓர் அத்தாட்சி அவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அதற்கு நபியே!) கூறுவீராக! “மறைவானவை எல்லாம் அல்லாஹ்விற்குரியனவே. ஆகவே, நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் (அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi20. (தவிர ‘‘நாம் விரும்புகிறவாறு) ஏதாவது ஓர் அத்தாட்சி (இறைவனின் நபியாகிய) அவர் மீது அவருடைய இறைவனால் இறக்கப்பட வேண்டாமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் விரும்புகிறவாறு அத்தாட்சியை இறக்கி வைக்காத காரணம் உங்களுக்கு மறைவானது.) மறைவான விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (ஆகவே, அதை நீங்கள் அறிய விரும்பினால்) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் (உங்கள் விஷமக் கூற்றினால் உங்களுக்கு என்ன கேடு வருகிறதென்பதை) உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றன்.''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70