caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:2

أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنْ أَوْحَيْنَآ إِلَىٰ رَجُلٍ مِّنْهُمْ أَنْ أَنذِرِ ٱلنَّاسَ وَبَشِّرِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِندَ رَبِّهِمْ قَالَ ٱلْكَٰفِرُونَ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ مُّبِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“(நிராகரிக்கின்ற) மனிதர்களை எச்சரிப்பீராக! இன்னும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு தங்கள் இறைவனிடத்தில் நற்கூலி அவர்களுக்கு உண்டு என நற்செய்தி கூறுவீராக!’’ என்று அவர்களில் உள்ள ஒரு மனிதருக்கு நாம் வஹ்யி அறிவித்தது மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? நிச்சயமாக இவர் தெளிவான சூனியக்காரர்தான் என்று (இந்)நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினார்கள்.
Tamil Translation - Omar Sharif“(நிராகரிக்கின்ற) மனிதர்களை எச்சரிப்பீராக! இன்னும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு தங்கள் இறைவனிடத்தில் உயர்வான நற்கூலி உண்டு - என நற்செய்தி கூறுவீராக!’’ என்று அவர்களில் உள்ள ஓர் ஆடவருக்கு நாம் வஹ்யி அறிவித்தது இந்த மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? நிச்சயமாக இவர் தெளிவான சூனியக்காரர்தான் என்று (இந்)நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. (நபியே!) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு வஹ்யி மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுங்கள். எனினும், (இவ்வாறு நீர் கூறுவதைப் பற்றி) இந்நிராகரிப்பவர்கள் உங்களை சந்தேகமற்ற ஒரு சூனியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70