وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَاتُنَا بَيِّنَٰتٍ قَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا ٱئْتِ بِقُرْءَانٍ غَيْرِ هَٰذَآ أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِىٓ أَنْ أُبَدِّلَهُۥ مِن تِلْقَآئِ نَفْسِىٓ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதப்பட்டால் நம் சந்திப்பை ஆதரவு வைக்காதவர்கள் “இது அல்லாத (வேறு) ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரீர்; அல்லது (எங்கள் இஷ்டப்படி) நீர் அதை மாற்றுவீராக” என்று கூறுகின்றனர். “என் புறத்திலிருந்து அதை நான் மாற்றுவது என்னால் முடியாது. எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறொன்றை) நான் பின்பற்ற மாட்டேன். என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) இவர்களுக்கு முன்னர் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால், நம் சந்திப்பை பயப்படாதவர்கள் - “இது அல்லாத (வேறு) ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரீர்; அல்லது, (எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப) நீர் அதை மாற்றுவீராக” என்று கூறுகிறார்கள். “என் புறத்திலிருந்து அதை நான் மாற்றுவது என்னால் முடியாது. எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்ற மாட்டேன். என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளி(ல் நரகத்தி)ன் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக.
Tamil Translation - Abdulhamid Baqawi15. (முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘இது அல்லாத வேறொரு குர்ஆனை நீர் கொண்டு வருவீராக; அல்லது எங்கள் இஷ்டப்படி இதை மாற்றிவிடுவீராக'' என்று கூறுகின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர, (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக.