caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:16

قُل لَّوْ شَآءَ ٱللَّهُ مَا تَلَوْتُهُۥ عَلَيْكُمْ وَلَآ أَدْرَىٰكُم بِهِۦ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِّن قَبْلِهِۦٓ أَفَلَا تَعْقِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(மேலும்) கூறுவீராக! “அல்லாஹ் நாடியிருந்தால், நான் இதை உங்கள் மீது ஓதியிருக்கவும் மாட்டேன்; இன்னும் அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். இதற்கு முன்னர் ஒரு (நீண்ட) காலம் உங்களுடன் வசித்துள்ளேன். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”
Tamil Translation - Omar Sharif(மேலும்) கூறுவீராக: “(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக் கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், நான் இதை உங்களுக்கு ஓதி காண்பித்திருக்கவும் மாட்டேன்; இன்னும், அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். ஆக, இதற்கு முன்னர் ஒரு (நீண்ட) காலம் உங்களுடன் வசித்துள்ளேன். ஆகவே, நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”
Tamil Translation - Abdulhamid Baqawi16. (மேலும்,) கூறுவீராக: ‘‘(உங்களுக்கு நான் இதை ஓதிக் காண்பிக்கக் கூடாதென்று) அல்லாஹ் எண்ணியிருந்தால், நான் இதை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்கவும் மாட்டேன். அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் வசித்துள்ளேன் (அல்லவா? நான் பொய் சொல்பவன் அல்ல என்பதை நீங்கள் நன்கறிந்திருக்கிறீர்கள். இவ்வளவுகூட), நீங்கள் அறிந்துகொள்ள முடியாதா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70