قُلْ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمْ فِى شَكٍّ مِّن دِينِى فَلَآ أَعْبُدُ ٱلَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِنْ أَعْبُدُ ٱللَّهَ ٱلَّذِى يَتَوَفَّىٰكُمْ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! மக்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்க மாட்டேன். எனினும், உங்கள் உயிரைக் கைப்பற்றுகிற அல்லாஹ்வைத்தான் வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நான் ஆகவேண்டுமென்று கட்டளையிடப்பட்டேன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! “மக்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வை அன்றி நீங்கள் எவர்களை வணங்குகிறீர்களோ அவர்களை நான் வணங்க மாட்டேன். எனினும், உங்கள் உயிரைக் கைப்பற்றுகின்ற (ஆற்றல் உடைய) அல்லாஹ்வைத்தான் வணங்குவேன். இன்னும், நம்பிக்கையாளர்களில் நான் ஆகவேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi104. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப்பட்டுள்ளேன்.