وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (நபியே!) உறுதியானவராக மார்க்கத்தின் மீது உம் முகத்தை நிலை நிறுத்துவீராக! இணைவைப்பவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்!
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) நீர் ஓர் இறையை வணங்குவதில் உறுதியானவராக (இணைவைப்பை விட்டும் முற்றிலும் விலகியவராக) மார்க்கத்தின் மீது உம் முகத்தை நிலை நிறுத்துவீராக! இன்னும், இணைவைப்பவர்களில் ஒருபோதும் நீர் ஆகிவிடாதீர்!
Tamil Translation - Abdulhamid Baqawi105. (நபியே!) உறுதியுடையவராக நேரான மார்க்கத்தின் பக்கமே உமது முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்.