caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Yunus அத்தியாயம், வசனம் 103

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 51 · 10:103

ثُمَّ نُنَجِّى رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُوا۟ كَذَٰلِكَ حَقًّا عَلَيْنَا نُنجِ ٱلْمُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாப்போம். இவ்வாறே, (உங்களையும்) நம்பிக்கை கொண்டவர்களை(யும்) நாம் பாதுகாப்பது நம்மீது கடமையாக உள்ளது.
Tamil Translation - Omar Sharifபிறகு, நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களையும் நாம் பாதுகா(த்துவிட்டு நிராகரிப்பாளர்களை அழி)ப்போம். இவ்வாறே, (உம்மையும் உம்முடன்) நம்பிக்கை கொண்டவர்களை(யும்) நாம் பாதுகாப்போம். இது நம்மீது கடமையாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi103. (அவ்வாறு வேதனை வரும் காலத்தில்) நம் தூதர்களை பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். (ஏனென்றால்,) நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வது நம்மீது கடமையாகவே இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70