إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர. ஆகவே, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.
Tamil Translation - Omar Sharifஎனினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ (அவர்கள் தள்ளாடும் வயதை அடைந்து நல்லமல் செய்ய முடியாமல் ஆகிவிட்டாலும்) அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi6. ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.