فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவரைப் பொய்ப்பித்தார்கள்; அதைக் கொன்றார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்களின் மீது கடுமையான வேதனையை இறக்கினான். அதை (-அந்த சமுதாயத்தை) சமமாக்கினான்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள். இன்னும் அ(ந்த ஒட்டகத்)தை (அறுத்து) கொன்றுவிட்டார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது கடுமையான தண்டனையை இறக்கினான். அ(ந்த சமுதாயத்)தை (அதில் உள்ள அனைவரையும் தண்டனையில்) சமமாக்கினான். (ஒட்டகத்தை கொன்றவன் ஒருவனாக இருந்தாலும் அதை எல்லோரும் பொருந்திக் கொண்டதால் அந்த சமுதாயத்தில் இருந்த எல்லோருக்கும் அதே தண்டனையை கொடுத்து அழித்துவிட்டான்.)
Tamil Translation - Abdulhamid Baqawi14. எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.