فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் (தடை செய்யாதீர்)” என்று அவர்களுக்குக் கூறினார்.
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ்வின் தூதர் (-ஸாலிஹ்) அவர்களுக்குக் கூறினார்: “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் தடை செய்யாதீர்!’’
Tamil Translation - Abdulhamid Baqawi13. அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.