ٱلْأَعْرَابُ أَشَدُّ كُفْرًا وَنِفَاقًا وَأَجْدَرُ أَلَّا يَعْلَمُوا۟ حُدُودَ مَآ أَنزَلَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் கிராம அரபிகள் மிகக் கடுமையானவர்கள். இன்னும் அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியவற்றின் சட்டங்களை அவர்கள் அறியாமல் இருக்க மிகத் தகுதியானவர்கள். அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானவான்.
Tamil Translation - Omar Sharifகிராம அரபிகள் நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகக் கடுமையானவர்கள். இன்னும், அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியவற்றின் சட்டங்களை அவர்கள் அறியாதவர்கள் என்று சொல்வதற்கு மிகத் தகுதியானவர்கள். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi97. நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கி இருக்கும் (வேதத்தின்) சட்ட வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், மிக்க ஞானமுடையவன் ஆவான்.