caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 83

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:83

فَإِن رَّجَعَكَ ٱللَّهُ إِلَىٰ طَآئِفَةٍ مِّنْهُمْ فَٱسْتَـْٔذَنُوكَ لِلْخُرُوجِ فَقُل لَّن تَخْرُجُوا۟ مَعِىَ أَبَدًا وَلَن تُقَٰتِلُوا۟ مَعِىَ عَدُوًّا إِنَّكُمْ رَضِيتُم بِٱلْقُعُودِ أَوَّلَ مَرَّةٍ فَٱقْعُدُوا۟ مَعَ ٱلْخَٰلِفِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அல்லாஹ் உம்மை (வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்திடம் திருப்பி, (அடுத்த போரில் உம்முடன்) அவர்கள் வெளியேறுவதற்கு உம்மிடம் அனுமதி கோரினால், (நீர்) கூறுவீராக: “ஒருபோதும் என்னுடன் அறவே புறப்படாதீர்கள். என்னுடன் சேர்ந்து (எந்த) ஒரு எதிரியிடமும் அறவே போரிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் முதல் முறை (வீட்டில்) உட்கார்ந்து விடுவதை விரும்பினீர்கள். ஆகவே, (இப்போதும்) பின் தங்கிவிடுபவர்களுடன் உட்கார்ந்து விடுங்கள்.”
Tamil Translation - Omar Sharif(நபியே!) ஆக, அல்லாஹ் உம்மை (வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு பிரிவினரிடம் திருப்பினால், அப்போது (அடுத்த போரில் உம்முடன் சேர்ந்து) அவர்கள் வெளியேறுவதற்கு உம்மிடம் அனுமதி கோரினால், (நீர்) கூறுவீராக: “ஒருபோதும் என்னுடன் அறவே புறப்படாதீர்கள். என்னுடன் சேர்ந்து (எந்த) ஒரு எதிரியிடமும் அறவே போரிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் முதல் முறை, (போருக்கு வராமல் வீட்டில்) உட்கார்ந்து விடுவதை விரும்பினீர்கள். ஆகவே, (இப்போதும்) பின் தங்கிவிடுபவர்களுடன் உட்கார்ந்து விடுங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi83. (நபியே!) நீர் (போரில் வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்ப வரும்படி அல்லாஹ் செய்து (உங்கள் வெற்றியையும், நீங்கள் கொண்டு வந்த பொருள்களையும் அவர்கள் கண்டு, உங்களுடன் மற்றொரு போருக்குப்) புறப்பட உங்களிடம் அனுமதி கோரினால் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (போருக்கு) ஒருக்காலத்திலும் என்னுடன் புறப்படவேண்டாம். என்னுடன் சேர்ந்து எந்த எதிரியிடமும் நீங்கள் போர்புரிய வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் முதன் முறையில் (வீட்டில்) தங்கிவிடுவதையே விரும்பினீர்கள். ஆதலால், (இப்பொழுதும்) நீங்கள் (வீட்டில்) தங்கிவிடுபவர்களுடன் இருந்து விடுங்கள்'' என்று (நபியே! நீர்) கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70