وَلَا تُصَلِّ عَلَىٰٓ أَحَدٍ مِّنْهُم مَّاتَ أَبَدًا وَلَا تَقُمْ عَلَىٰ قَبْرِهِۦٓ إِنَّهُمْ كَفَرُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَمَاتُوا۟ وَهُمْ فَٰسِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்களில் இறந்த ஒருவர் மீது ஒருபோதும் (ஜனாஸா தொழுகை) தொழாதீர். அவருடைய புதைகுழிக்கு அருகில் நிற்காதீர். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர். இன்னும் அவர்களோ பாவிகளாக இறந்தனர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) இன்னும், அவர்களில் யார் இறந்துவிட்டாரோ அவருக்கு ஒருபோதும் (ஜனாஸா தொழுகை) தொழாதீர். அவருடைய புதைகுழிக்கு அருகில் நிற்காதீர். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர். இன்னும், அவர்களோ பாவிகளாக இருக்கும் நிலையில் இறப்பெய்தினர்.
Tamil Translation - Abdulhamid Baqawi84. மேலும், அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து விட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர்.