caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 72

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:72

وَعَدَ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَمَسَٰكِنَ طَيِّبَةً فِى جَنَّٰتِ عَدْنٍ وَرِضْوَٰنٌ مِّنَ ٱللَّهِ أَكْبَرُ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களையும், (அத்ன் எனும்) நிலையான சொர்க்கங்களில் நல்ல தங்குமிடங்களையும் அல்லாஹ் வாக்களித்தான். (அவர்கள்) அவற்றில் நிரந்தரமானவர்கள். அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் சொர்க்கங்களையும், (அத்ன் எனும்) நிலையான சொர்க்கங்களில் நல்ல தங்குமிடங்களையும் அல்லாஹ் வாக்களித்தான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அவற்றில் நிரந்தரமாக தங்குவார்கள். இன்னும், (இவை அனைத்தையும் விட அவர்களுக்கு கிடைக்க இருக்கும்) அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியதாகும். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்லாஹ் சொர்க்கங்களை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே (என்றென்றும்) தங்கியும் விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சொர்க்கங்களில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வாக்களித்திருக்கிறான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால் (இவை அனைத்தையும்விட) அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மிகப் பெரியது. (அதுவும் அங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அனைத்தையும் விட) இது மகத்தான பெரும் பாக்கியமாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70