وَٱلْمُؤْمِنُونَ وَٱلْمُؤْمِنَٰتُ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ يَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَيُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَيُطِيعُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُو۟لَٰٓئِكَ سَيَرْحَمُهُمُ ٱللَّهُ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள். அவர்கள், நன்மையை ஏவுகின்றனர்; தீமையைவிட்டு தடுக்கின்றனர்; தொழுகையை நிலைநிறுத்துகின்றனர்; ஸகாத்தை கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றனர். இவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கை கொண்ட ஆண்கள், இன்னும், நம்பிக்கை கொண்ட பெண்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவார்கள். அவர்கள், நன்மையை ஏவுகிறார்கள்; இன்னும், தீமையை விட்டு தடுக்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள்; இன்னும், ஸகாத்தை கொடுக்கிறார்கள்; இன்னும், அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். இவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi71. நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். இவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள் புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.