caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 67

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:67

ٱلْمُنَٰفِقُونَ وَٱلْمُنَٰفِقَٰتُ بَعْضُهُم مِّنۢ بَعْضٍ يَأْمُرُونَ بِٱلْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُوا۟ ٱللَّهَ فَنَسِيَهُمْ إِنَّ ٱلْمُنَٰفِقِينَ هُمُ ٱلْفَٰسِقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநயவஞ்சக ஆண்களும், நயவஞ்சக பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்களே! அவர்கள் தீமையை ஏவுகின்றனர்; நன்மையை விட்டு தடுக்கின்றனர். தங்கள் கரங்களை மூடிக் கொள்கின்றனர் (கருமித்தனம் செய்கின்றனர்). அவர்கள் அல்லாஹ்வை மறந்தார்கள்; ஆகவே, (அல்லாஹ்வும்) அவர்களை மறந்தான். நிச்சயமாக நயவஞ்சகர்கள்தான் பாவிகள்.
Tamil Translation - Omar Sharifநயவஞ்சகமுடைய ஆண்களும், நயவஞ்சகமுடைய பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்களே! அவர்கள் தீமையை ஏவுகிறார்கள்; இன்னும், நன்மையை விட்டு தடுக்கிறார்கள்; இன்னும், தங்கள் கரங்களை மூடிக் கொள்கிறார்கள் (கருமித்தனம் செய்கிறார்கள்). அவர்கள் அல்லாஹ்வை மறந்தார்கள். ஆகவே, அவனும் அவர்களை (இறையருள் இன்றி) விட்டுவிட்டான். நிச்சயமாக நயவஞ்சகர்கள்தான் (அல்லாஹ்வின் கட்டளையை மீறுகின்ற) பாவிகள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi67. ஆணாயினும் பெண்ணாயினும் நயவஞ்சகர்கள் அனைவரும் ஒரே இனத்தவரே! அவர்கள் (அனைவருமே) பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவார்கள்; நன்மையான காரியங்களைத் தடை செய்வார்கள். (செலவு செய்ய அவசியமான சமயங்களில்) தங்கள் கைகளை மூடிக்கொள்வார்கள். அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆதலால், அல்லாஹ்வும் அவர்களை மறந்து விட்டான். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் தான் (சதி செய்யும்) கொடிய பாவிகள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70