لَا تَعْتَذِرُوا۟ قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَٰنِكُمْ إِن نَّعْفُ عَن طَآئِفَةٍ مِّنكُمْ نُعَذِّبْ طَآئِفَةًۢ بِأَنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் (செய்யும் விஷமத்தனத்திற்கு) புகல் கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தால் (மற்ற) ஒரு கூட்டத்தை நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்த காரணத்தால், வேதனை செய்வோம்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் (செய்யும் விஷமத்தனத்திற்கு) சாக்கு போக்கு கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் திட்டமாக நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தால் (மற்ற) ஒரு கூட்டத்தை, - நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்த காரணத்தால் - தண்டிப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi66. நீங்கள் (செய்யும் விஷமத்தனமான பரிகாசத்திற்கு) வீண் புகழ் கூற வேண்டாம். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அதை) நிராகரித்துவிட்டீர்கள். ஆகவே, உங்களில் ஒரு கூட்டத்தினரை நாம் மன்னித்த போதிலும் மற்றொரு கூட்டத்தினர் நிச்சயமாக குற்றவாளிகளாகவே இருப்பதனால், நாம் அவர்களை வேதனை செய்தே தீருவோம் (என்றும் நபியே! நீர் கூறுவீராக.)