caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 50

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:50

إِن تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكَ مُصِيبَةٌ يَقُولُوا۟ قَدْ أَخَذْنَآ أَمْرَنَا مِن قَبْلُ وَيَتَوَلَّوا۟ وَّهُمْ فَرِحُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உம்மை ஒரு நன்மை அடைந்தால் அது அவர்களைத் துக்கப்படுத்துகிறது. உம்மை ஒரு சோதனை அடைந்தால், “முன்னரே எங்கள் காரியத்தை (எச்சரிக்கையுடன்) நாங்கள் (முடிவு) எடுத்துக் கொண்(டு போருக்கு வராமல் தங்கி விட்)டோம்” என்று கூறி, அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக (உம்மை விட்டு) திரும்புகின்றனர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அவர்களைத் துக்கப்படுத்துகிறது. இன்னும், உமக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “முன்னரே எங்கள் காரியத்தை (எச்சரிக்கையுடன்) நாங்கள் (முடிவு) எடுத்துக் கொண்(டு போருக்கு வராமல் தங்கி விட்)டோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இன்னும், அவர்களோ மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கும் நிலையில் (உம்மை விட்டு) திரும்பி செல்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi50. (நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களுக்குத் துன்பத்தைத் தருகிறது. உமக்கு ஒரு தீங்கேற்பட்டாலோ ‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் காரியத்தில் (உங்களைச் சம்பந்தப்படுத்தாது) ஏற்கனவே எச்சரிக்கையாய் இருந்து கொண்டோம்'' என்று கூறி மிக்க மகிழ்ச்சியுடன் உம்மை விட்டு) விலகிச் செல்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70