لَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ فِى مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْـًٔا وَضَاقَتْ عَلَيْكُمُ ٱلْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُم مُّدْبِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக அதிகமான போர்க்களங்களிலும் ஹுனைன் (போர்) அன்றும் அல்லாஹ் உங்களுக்கு உதவினான். நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருப்பது உங்களை பெருமைப்படுத்தியபோது (அந்த எண்ணிக்கை) உங்களுக்கு எதையும் பலன் தரவில்லை. பூமி அது விசாலமாக இருந்தும் உங்கள் மீது நெருக்கடியாகி விட்டது. பிறகு, நீங்கள் புறமுதுகு காட்டியவர்களாக திரும்பினீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅதிகமான போர்க்களங்களிலும் ஹுனைன் போரிலும் அல்லாஹ் உங்களுக்கு திட்டவட்டமாக உதவினான். நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருப்பது உங்களை பெருமைப்படுத்தியபோது (அந்த எண்ணிக்கை) உங்களுக்கு எதையும் பலன் தரவில்லை. இன்னும், பூமி - அது விசாலமாக இருந்தும் உங்களுக்கு நெருக்கடியாகி விட்டது. பிறகு, நீங்கள் புறமுதுகு காட்டியவர்களாக திரும்பி (ஓடி)னீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi25. பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள்.