قُلْ إِن كَانَ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ وَإِخْوَٰنُكُمْ وَأَزْوَٰجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَٰلٌ ٱقْتَرَفْتُمُوهَا وَتِجَٰرَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَٰكِنُ تَرْضَوْنَهَآ أَحَبَّ إِلَيْكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٍ فِى سَبِيلِهِۦ فَتَرَبَّصُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّهُ بِأَمْرِهِۦ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக: உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், அது மந்தமாகிவிடுவதை நீங்கள் பயப்படும் வர்த்தகமும், நீங்கள் விரும்பும் வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவனுடைய பாதையில் போரிடுவதையும்விட உங்களுக்கு மிக விருப்பமாக இருந்தால் அல்லாஹ் தன் (வேதனையின்) கட்டளையைக் கொண்டு வரும் வரை எதிர்பாருங்கள். அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Omar Sharif(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) கூறுவீராக: “உங்கள் தந்தைமார்களும், (உங்கள் தாய்மார்களும்) உங்கள் ஆண் பிள்ளைகளும், (உங்கள் பெண் பிள்ளைகளும்) உங்கள் சகோதரர்களும், (உங்கள் சகோதரிகளும்) உங்கள் மனைவிகளும், (நீங்கள் பெண்களாக இருந்தால் உங்கள் கணவன்மார்களும்) உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், அது மந்தமாகிவிடுமோ என்று நீங்கள் பயப்படும் வர்த்தகமும், நீங்கள் விரும்பும் வீடுகளும் அல்லாஹ்வை விட; இன்னும், அவனுடைய தூதரை விட; இன்னும், அவனுடைய பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு மிக விருப்பமாக இருந்தால் அல்லாஹ் (உங்களிடம்) தன் (தண்டனையின்) கட்டளையைக் கொண்டு வரும் வரை எதிர்பாருங்கள். இன்னும், அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi24. (நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீர் கூறுவீராக: உங்கள் தந்தைகளும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரை நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (இப்படிப்பட்ட) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.