ثُمَّ أَنزَلَ ٱللَّهُ سَكِينَتَهُۥ عَلَىٰ رَسُولِهِۦ وَعَلَى ٱلْمُؤْمِنِينَ وَأَنزَلَ جُنُودًا لَّمْ تَرَوْهَا وَعَذَّبَ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَذَٰلِكَ جَزَآءُ ٱلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும் தன் (புறத்திலிருந்து) அமைதியை இறக்கினான். இன்னும் சில படைகளை இறக்கினான். அவற்றை நீங்கள் பார்க்கவில்லை. நிராகரித்தவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களின் கூலியாகும்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும் தன் (புறத்திலிருந்து) அமைதியை இறக்கினான். இன்னும், சில படைகளை இறக்கினான். அவர்களை நீங்கள் பார்க்கவில்லை. இன்னும், நிராகரித்தவர்களை தண்டித்தான். இதுதான் நிராகரிப்பவர்களின் கூலியாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. (இதன்) பின்னர், அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியை இறக்கி அருள்புரிந்தான். உங்கள் கண்ணுக்குத் தெரியாத படைகளையும் (உங்கள் உதவிக்காக) இறக்கி வைத்து நிராகரிப்பவர்களை வேதனை செய்தான். இதுதான் நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும்.