caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 23

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:23

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوٓا۟ ءَابَآءَكُمْ وَإِخْوَٰنَكُمْ أَوْلِيَآءَ إِنِ ٱسْتَحَبُّوا۟ ٱلْكُفْرَ عَلَى ٱلْإِيمَٰنِ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! உங்கள் தாய் தந்தைகளையும், உங்கள் சகோதரர்களையும் பொறுப்பாளர்களாக (பாதுகாவலர்களாக) எடுத்துக் கொள்ளாதீர்கள் அவர்கள் இறைநம்பிக்கையை விட நிராகரிப்பை விரும்பினால். உங்களில் எவர்கள் அவர்களை பொறுப்பாளர்களாக ஆக்கிக் கொள்வார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைமார்களையும், (உங்கள் தாய்மார்களையும்) உங்கள் சகோதரர்களையும் (உங்கள் சகோதரிகளையும் உங்களுக்கு உற்ற நேசர்களாகவும்) பொறுப்பாளர்களாக(வும்) எடுத்துக் கொள்ளாதீர்கள், - அவர்கள் (இஸ்லாமை ஏற்காமல்) இறைநம்பிக்கையை விட நிராகரிப்பை விரும்பினால். இன்னும், உங்களில் எவர்கள் அவர்களை பொறுப்பாளர்களாக (நேசர்களாக) ஆக்கிக் கொள்வார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. நம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைகளும், சகோதரர்களும் நம்பிக்கையை விட்டு நிராகரிப்பை விரும்பினால், நீங்கள் அவர்களை (உங்கள்) பாதுகாப்பாளர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக அவர்கள்தான் வரம்பு மீறியவர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70