إِنَّمَا يَعْمُرُ مَسَٰجِدَ ٱللَّهِ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَلَمْ يَخْشَ إِلَّا ٱللَّهَ فَعَسَىٰٓ أُو۟لَٰٓئِكَ أَن يَكُونُوا۟ مِنَ ٱلْمُهْتَدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை பராமரிப்பதெல்லாம் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) பயப்படாதவர்(கள்)தான். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்களில் இருக்கக்கூடும்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை பராமரிப்ப(தற்கு தகுதி உள்ள)வர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) பயப்படாதவர்கள்தான். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்களில் இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi18. எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வைத் தவிர மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இவர்கள்தான் நேரான வழியில் இருப்பவர்கள்.