caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 17

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:17

مَا كَانَ لِلْمُشْرِكِينَ أَن يَعْمُرُوا۟ مَسَٰجِدَ ٱللَّهِ شَٰهِدِينَ عَلَىٰٓ أَنفُسِهِم بِٱلْكُفْرِ أُو۟لَٰٓئِكَ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ وَفِى ٱلنَّارِ هُمْ خَٰلِدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்கள் மீது நிராகரிப்பிற்கு (தாங்களே) சாட்சி கூறியவர்களாக இருக்கும் நிலையில் இணைவைப்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலிப்பதற்கு உரிமை இருக்கவில்லை. அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. நரகத்தில்தான் அவர்கள் நிரந்தரமானவர்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலிப்பதற்கு இணைவைப்பாளர்களுக்கு உரிமை இருக்கவில்லை. (அவர்களுடைய) நிராகரிப்பிற்கு அவர்களே சாட்சி கூறுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய (நற்)செயல்கள் (இவ்வுலகிலேயே) அழிந்துவிடும். இன்னும், (மறுமையில்) நரகத்திலே அவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தான் என்று (பகிரங்கமாக) கூறிக் கொண்டிருக்கும் வரை, அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கி விடுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70