caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 19

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:19

أَجَعَلْتُمْ سِقَايَةَ ٱلْحَآجِّ وَعِمَارَةَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ كَمَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَجَٰهَدَ فِى سَبِيلِ ٱللَّهِ لَا يَسْتَوُۥنَ عِندَ ٱللَّهِ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஹாஜிக்கு தண்ணீர் புகட்டுவதையும், புனித மஸ்ஜிதை பராமரிப்பதையும் அல்லாஹ் இன்னும் இறுதி நாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் போர்புரிந்தவர் (உடைய செயலைப்) போன்று நீங்கள் ஆக்கினீர்களா? அல்லாஹ்விடம் (இவர்கள்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஹஜ் செய்பவர்களுக்கு தண்ணீர் புகட்டுவதையும், புனித மஸ்ஜிதை பராமரிப்பதையும் - அல்லாஹ் இன்னும் இறுதி நாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் போர்புரிந்தவர் (உடைய செயலைப்) போன்று - நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்விடம் (இவர்கள் இருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. (நம்பிக்கை கொள்ளாமல் இருந்துகொண்டு) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுபவர் களையும், சிறப்புற்ற மஸ்ஜிதுக்கு ஊழியம் செய்பவர்களையும் அல்லாஹ்வை இன்னும் இறுதிநாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிபவர்களுக்குச் சமமாக நீங்கள் ஆக்கி விட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70