أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُوا۟ وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَٰهَدُوا۟ مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا۟ مِن دُونِ ٱللَّهِ وَلَا رَسُولِهِۦ وَلَا ٱلْمُؤْمِنِينَ وَلِيجَةً وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனம் விரும்பி) போர்புரிந்து, அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களையும் அன்றி (மற்றவர்களை தங்கள்) அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்களை அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல் இருக்க, நீங்கள் (இப்படியே) விட்டுவிடப்படுவீர்கள் என்று எண்ணினீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவர்கள் (மனம் விரும்பி) போர்புரிந்தார்களோ அவர்களையும்; இன்னும், அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகிய இவர்கள் அல்லாதவர்களை அந்தரங்க நண்பர்களாக எவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்களையும் அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல் இருக்கும் நிலையில், நீங்கள் (சோதிக்கப்படாமல்) விட்டுவிடப்படுவீர்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (உண்மையாகவே மனம் விரும்பி) போர் புரிந்தவர்கள் யாரென்பதையும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் தவிர (மற்றெவரையும் தங்கள்) அந்தரங்க நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதவர்கள் யார் என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறிவிக்காமல், நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.