caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 114

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:114

وَمَا كَانَ ٱسْتِغْفَارُ إِبْرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوْعِدَةٍ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوٌّ لِّلَّهِ تَبَرَّأَ مِنْهُ إِنَّ إِبْرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபி) இப்ராஹீம் தன் தந்தைக்கு மன்னிப்புக் கோரியது, அவர் அவருக்கு வாக்களித்த வாக்குறுதிக்காகவே தவிர (வேறு எதற்காகவும்) இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்வுக்கு அவர் ஓர் எதிரி என அவருக்குத் தெளிவானபோது அவரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் அதிகம் பிரார்த்திப்பவர், பெரும் சகிப்பாளர்.
Tamil Translation - Omar Sharif(நபி) இப்ராஹீம் தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது, அவர் அவருக்கு வாக்களித்த வாக்குறுதியை முன்னிட்டே தவிர (வேறு காரணத்திற்காக) இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்விற்கு அவர் எதிரி என அவருக்குத் தெளிவானபோது அவரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் அதிகம் பிரார்த்திப்பவர், பெரும் சகிப்பாளர்.
Tamil Translation - Abdulhamid Baqawi114. இப்றாஹீம் (நபி) தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியதெல்லாம், அவர் தன் தந்தைக்குச் செய்திருந்த ஒரு வாக்குறுதிக்காகவே தவிர வேறில்லை. (அவருடைய தந்தை) அல்லாஹ்வுக்கு எதிரி எனத் தெளிவாகத் தெரிந்ததும் அ(வருக்காக மன்னிப்புக் கோருவ)திலிருந்து அவர் விலகிக் கொண்டார். நிச்சயமாக இப்றாஹீம் அதிகம் பிரார்த்திப்பவரும் மிக இரக்கமும் அடக்கமும் உடையவரும் ஆவார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70