مَا كَانَ لِلنَّبِىِّ وَٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن يَسْتَغْفِرُوا۟ لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوٓا۟ أُو۟لِى قُرْبَىٰ مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக (இணைவைப்பவர்கள்) அவர்கள் நரகவாசிகள் என்று தங்களுக்குத் தெளிவாகிய பின்னர், அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் இணைவைப்பவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுந்ததல்ல.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுந்ததல்ல, இணைவைப்பவர்களுக்காக அவர்கள் பாவமன்னிப்பு கோருவது, அவர்கள் நரகவாசிகள் என்று அவர்களுக்கு தெளிவான பின்னர். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி.
Tamil Translation - Abdulhamid Baqawi113. இணைவைத்து வணங்குபவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கோ நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதல்ல; அவர்கள் (இவர்களுக்கு) நெருங்கிய உறவிர்களாகயிருந்தாலும் சரியே! அவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்கு மன்னிப்புக் கோரலாம்?)