وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِلَّ قَوْمًۢا بَعْدَ إِذْ هَدَىٰهُمْ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு கூட்டத்தை அவர்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவற்றை அவன் அவர்களுக்கு விவரிக்கும் வரை அவர்களை அவன் வழிகெடுப்பவனாக ஆகியிருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஒரு கூட்டத்தினரை, அவர்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர், அவர்கள் தவிர்ந்து விலகி இருக்க வேண்டியவற்றை அவன் அவர்களுக்கு விவரிக்கும் வரை அவர்களை அவன் வழிகெட்டவர்கள் என்று முடிவு செய்பவனாக இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi115. ஒரு கூட்டத்தினரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்திய பின்னர், அவர்கள் தவறிழைக்கும்படி அவன் (விட்டு) விடமாட்டான், - அவர்கள் விலகிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை என்பதை அவன் அவர்களுக்கு தெளிவாக அறிவிக்கின்ற வரை. நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.