caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tawba அத்தியாயம், வசனம் 101

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 113 · 9:101

وَمِمَّنْ حَوْلَكُم مِّنَ ٱلْأَعْرَابِ مُنَٰفِقُونَ وَمِنْ أَهْلِ ٱلْمَدِينَةِ مَرَدُوا۟ عَلَى ٱلنِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ سَنُعَذِّبُهُم مَّرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ إِلَىٰ عَذَابٍ عَظِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களைச் சூழவுள்ள கிராம அரபிகளிலும் இன்னும் மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தின் மீது ஊறிவிட்டனர். (நபியே! நீர்) அவர்களை அறியமாட்டீர்; நாம் அவர்களை அறிவோம். அவர்களை இருமுறை வேதனை செய்வோம். பிறகு, பெரிய வேதனையின் பக்கம் (அவர்கள்) திருப்பப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் உங்களைச் சூழவுள்ள கிராம அரபிகளிலும் மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தின் மீது பிடிவாதமாக நிலைத்திருந்து அழிச்சாட்டியம் செய்கிறார்கள். (நபியே! நீர்) அவர்களை அறியமாட்டீர்; நாம்தான் அவர்களை அறிவோம். விரைவில் அவர்களை இருமுறை தண்டிப்போம். பிறகு, (மறுமையில் நரகத்தின்) பெரிய தண்டனையின் பக்கம் (அவர்கள்) மீண்டும் கொண்டு வரப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi101. (நம்பிக்கையாளர்களே!) உங்களைச் சூழவுள்ள (கிராமங்களில் வசிக்கும்) கிராமத்து அரபிகளில் நயவஞ்சகர்கள் (பலர்) இருக்கின்றனர். (அதிலும்) மதீனாவிலுள்ள பலர் வஞ்சகத்திலேயே ஊறிக் கிடக்கின்றனர். (நபியே!) நீர் அவர்களை அறியமாட்டீர்; நாம் அவர்களை நன்கு அறிவோம். அதிசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை (கடினமாக) வேதனை செய்வோம். முடிவில் மகத்தான வேதனையின் பக்கம் அவர்கள் விரட்டப்படுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70