إِذْ يُرِيكَهُمُ ٱللَّهُ فِى مَنَامِكَ قَلِيلًا وَلَوْ أَرَىٰكَهُمْ كَثِيرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَلَٰكِنَّ ٱللَّهَ سَلَّمَ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை உமக்கு குறைவாக காண்பித்த சமயத்தை நினைவு கூருவீராக. உமக்கு அவர்களை அதிகமானவர்களாக காண்பித்திருந்தால் நீங்கள் துணிவிழந்திருப்பீர்கள், (போர் பற்றிய) காரியத்தில் தர்க்கித்திருப்பீர்கள். என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அல்லாஹ், உமது கனவில் அவர்களை உமக்கு குறைவாக காண்பித்த சமயத்தை நினைவு கூர்வீராக. உமக்கு அவர்களை அதிகமானவர்களாக காண்பித்திருந்தால் (பிறகு நீர் அதை முஸ்லிம்களுக்கு கூறி இருந்தால் முஸ்லிம்களே) நீங்கள் கோழையாகி இருப்பீர்கள்; இன்னும், (போர் பற்றிய) காரியத்தில் ஒருவருக்கொருவர் (உங்களுக்குள்) தர்க்கித்திருப்பீர்கள். என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. (நபியே!) உமது கனவில் அல்லாஹ், அவர்களை (எண்ணிக்கையில்) குறைத்துக் காண்பித்ததையும் நீர் நினைத்துப் பார்ப்பீராக. அவர்களை அதிகப்படுத்தி உமக்குக் காண்பித்திருந்தால் நீரும் மற்ற நம்பிக்கையாளர்களும் தைரியமிழந்து போர் செய்வதைப் பற்றி உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு இருப்பீர்கள். எனினும், அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.