وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ ٱلْتَقَيْتُمْ فِىٓ أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِىٓ أَعْيُنِهِمْ لِيَقْضِىَ ٱللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக நீங்கள் (அவர்களை) சந்தித்தபோது உங்கள் கண்களில் உங்களுக்கு அவர்களை குறைவாக காண்பித்து, உங்களை அவர்களுடைய கண்களில் குறைவாக காண்பித்தபோது (சத்தியம் வென்றது). அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக நீங்கள் (அவர்களை) சந்தித்தபோது உங்கள் கண்களில் உங்களுக்கு அவர்களை குறைவாக காண்பித்து, உங்களை அவர்களுடைய கண்களில் குறைவாக காண்பித்தபோது (சத்தியம் வென்றது, அசத்தியம் தோற்றுப்போனது). இன்னும், அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படுகின்றன.
Tamil Translation - Abdulhamid Baqawi44. அவர்களும் நீங்களும் சந்தித்துக்கொண்ட சமயத்தில், அவர்களை உங்கள் கண்களுக்குக் குறைத்தும், உங்களை அவர்களுடைய கண்களுக்குக் குறைத்தும் காண்பித்ததெல்லாம், அல்லாஹ் முடிவு செய்த காரியம் நடைபெற்று (அவர்களை அழித்து)த் தீருவதற்காகத்தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் சென்று முடிவடைகின்றன.