إِن تَسْتَفْتِحُوا۟ فَقَدْ جَآءَكُمُ ٱلْفَتْحُ وَإِن تَنتَهُوا۟ فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَإِن تَعُودُوا۟ نَعُدْ وَلَن تُغْنِىَ عَنكُمْ فِئَتُكُمْ شَيْـًٔا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(காஃபிர்களே!) நீங்கள் தீர்ப்புத் தேடினால் உங்களுக்கு தீர்ப்பு வந்துவிட்டது. (ஆகவே, விஷமத்திலிருந்து) நீங்கள் விலகினால் அது உங்களுக்கு சிறந்தது. நீங்கள் (விஷமத்திற்கு) திரும்பினால் (நாமும் நம்பிக்கையாளர்களுக்கு உதவ) திரும்புவோம். உங்கள் கூட்டம் அது அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு எதையும் பலனளிக்காது. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharif(காஃபிர்களே!) நீங்கள் தீர்ப்புத் தேடினால் உங்களுக்கு தீர்ப்பு வந்துவிட்டது. (ஆகவே, விஷமத்திலிருந்து) நீங்கள் விலகினால் அது உங்களுக்கு சிறந்தது. நீங்கள் (விஷமத்தின் பக்கம்) திரும்பினால் (நாமும் நம்பிக்கையாளர்களுக்கு உதவ) திரும்புவோம். உங்கள் கூட்டம் அது அதிகமாக இருந்தாலும் உங்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்காது. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. (நிராகரிப்பாளர்களே!) நீங்கள் வெற்றியின் மூலம் (முடிவான) தீர்ப்பைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். நிச்சயமாக அந்த வெற்றி உங்கள் முன் வந்துவிட்டது. (எனினும் அது உங்களுக்கல்ல; நம்பிக்கையாளர்களாகிய எங்களுக்கே! நாங்கள்தான் உங்களை வெற்றி கொண்டோம். ஆகவே, விஷமம் செய்வதிலிருந்து) இனியேனும் நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்கே நன்று. இனியும் நீங்கள் (விஷமம் செய்ய) முன் வரும்பட்சத்தில் நாமும் முன் வருவோம். உங்கள் கூட்டம் எவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் (அது) உங்களுக்கு ஒரு பலனையுமளிக்காது. ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்.